தமிழ்நாடு
ஆளுநர் குறித்த முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்கு தமிழிசை கருத்து!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு என விமர்சித்திருந்தார். இதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

#image_title
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில், ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது, பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்றார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேச பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார். அதில், மருத்துவர்களுக்கு இதயம் இருப்பது போலத்தான் ஆளுநர்களுக்கும் இதயம் இருக்கிறது. ஆளுநர்களுக்கு வாய், காது இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது என்றார்.