Connect with us

உலகம்

ஆர்டர் செய்த உணவில் கோழியின் தலை: அதிர்ச்சி புகைப்படம்!

Published

on

ஆர்டர் செய்த உணவில் முழு கோழி தலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட உலகின் பல பகுதிகளில் கிளைகளைக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றில் சிக்கன் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடதக்கது. மிகவும் ருசியாகவும் சுவையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விலை அதிகமாக இருந்தாலும் அந்த ஓட்டலுக்கு சென்று அசைவ உணவுகளை சாப்பிடும் வழக்கம் கிட்டதட்ட அனைவருக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள டிவிக்கன் என்ற நகரில் உள்ள அந்த ஓட்டலின் கிளையில் கேப்ரில்லா என்ற பெண் உணவு சாப்பிட சென்றுள்ளார். அவர் ஹாட் விங்ஸ் பாக்ஸ் ஒன்றை ஆர்டர் செய்த நிலையில் அந்த உணவை எடுத்து அவர் ஆர்வத்துடன் சாப்பிட்ட போது உள்ளே கோழியின் தலை ஒன்று முழுதாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அந்த கோழியின் தலையை புகைப்படம் எடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘நான் ஆர்டர் செய்த உணவில் வறுத்த கோழியின் தலை இருந்தது, மிகவும் மோசம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தீவிரமாக விசாரித்து தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உணவு நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
upgrade to vip (no plugin) →.