இந்தியா
10-ஆம் வகுப்பு மாணவியை கதற கதற கற்பழித்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள்!

விடுதியில் தங்கி படித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் பலவந்தமாக கற்பழித்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள உண்டு உறைவிட பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதான மாணவியை கடந்த சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் சுதந்திர தினத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த போது அதே பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் கதற கதற பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து சில நாட்கள் கழித்து மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக விடுதியில் உள்ள வார்டன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரைகளை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சில நாட்கள் கழித்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பெற்றோர் மாணவியை அழைத்துக்கொண்டு போய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகி அவரது மனைவி, விடுதி வார்டன் உள்ளிட்ட 5 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியை பலாத்காரம் செய்த நான்கு மாணவர்களுக்கும் 17 வயது என்பதால் அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






















