தமிழ்நாடு
தீவிரமாக நடக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள்.. கோவில்களுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது .
கடந்த மார்ச் 13ம் தேதி 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை இந்த தேர்வுகள் இடைவெளியுடன் நடக்க உள்ளது. புதுச்சேரியிலும் தேர்வு நடந்து வருகிறது.
கடந்த மார்ச் 14ம் தேதி 11ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின. ஏப்ரல் 5ம் தேதி வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.
இந்த நிலையில் தேர்வுகளுக்காக மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது . அதன்படி திருவிழாக்களில்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு இது இடையூறாக இருக்கும். அதனால் சத்தமாக இருக்கும் ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கோவில்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை வந்த பொதுநல மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.