சினிமா செய்திகள்
மீண்டும் டாப் ஹீரோ உடன் இணையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..?

தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் இயக்குநர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஒரு டாப் ஹீரோவை இயக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மாநகரம் படம் மூலம் ஹிட் இயக்குநராக அறிமுகம் ஆனார் லோகேஷ் கனகராஜ். அடுத்து கார்த்தி உடன் கைதி, விஜய் உடன் மாஸ்டர், கமல் உடன் விக்ரம் என கலக்கி வருகிறார். இதை அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் உடன் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தையில் உள்ளார். ராம்சரணுக்கான கதை அவருக்குப் பிடித்துவிட்டால் தெலுங்கு பட உலகில் இதன் மூலம் தனது அறிமுகத்தை லோகேஷ் மேற்கொள்வார்.

மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில் கமல் உடனான விக்ரம் படத்தை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குள் முடித்து வெளியிட்டுவிட வேண்டும் என வேகமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம் லோகேஷ். இதனால் விரைவில் அடுத்தப் படத்துக்கான அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.
















