சினிமா செய்திகள்
தனுஷின் ‘மாறன்’ டிரைலர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
Published
11 months agoon
By
Shiva
தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி திரைப்படம் ‘மாறன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் சமூக வலை தளத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் பத்திரிக்கையாளர்கள் கேரக்டரில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோருக்கு ஏற்படும் சிக்கல்கள், குடும்பத்தினருக்கு ஏற்படும் பிரச்சினைகள், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையால் பழிவாங்கப்படும் நிலை மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இயக்குனர் கார்த்திக் நரேன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த படத்தை கொண்டு சென்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 11ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தில் அரசியல்வாதி வில்லன் கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!