டிவி
குடும்ப கஷ்டங்களை பேசி நம்மையும் அழ வைக்க தயாரான பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து போட்டியாளர்களின் குடும்ப பிரிவினைகளைப் பேசுவதும், அதனுடன் பார்வையாளர்களை ஒன்றிணைப்பதும் ஒரு உத்தி.
அதன் படி இரண்டாவது நாள் பிக்பாஸ் நிகழ்வின் 4 வது ப்ரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்ப பிரிச்னைகள், அவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், துயரங்கள் பற்றி எல்லாம் இன்று பேச உள்ளனர்.
ப்ரோமோவில், தன் வேலையை நேசித்ததால், 2 மாத குழந்தைக்கு ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒன்று பற்றி நிஷா பிற போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். அது பிறரை அதிர்ச்சியடையவும், கண்ணீரும் வர வைக்கிறது.
இப்படி ஒவ்வொரு போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வை பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள். இதை தங்கள் வாழ்க்கையுடன் நேர்ந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு போட்டியாளர்களுடன் எவ்வளவு பார்வையாளர்கள் இணைந்து 100 நாட்கள் பயணிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.