Connect with us

டிவி

குறும்படம் என்ன நெடும் படமே போடுங்கள்.. பிக்பாஸ் சீசன் 4-ல் தொடங்கிய முதல் சண்டை!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் சண்டை அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் தொடங்கியுள்ளது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வெளியாகும் ப்ரோமோக்களில், ஏதேனும் ஒன்றில் சண்டை இருப்பது போன்று வந்து விடும். அப்படி பிக்பாஸ் சீசன் 4-ன் 3 வது ப்ரோமோவில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் சண்டை தொடங்கியுள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தி நான் செய்தி வாசிப்பாளர்களிடம் பேச மாட்டேன். அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என்று சொன்னதாகவும், அப்படி நீங்கள் எப்படி சொல்லாம் என்று அனிதா சம்பத்துடன் அனிதா சம்பத் கேட்கிறார்.

அதற்குப் பதில் அளித்த சுரேஷ், தான் அப்படி கூறவில்லை என்று மறுக்கிறார். மேலும் முயலுக்கு 3 கால் என்பது போல பேசாதீர்கள் என்று கூறுகிறார். உடனே அனிதா சம்பத் நீங்கள் அப்படிதான் பேசினீர்கள். குறும்படம் ஒன்று போட்டால் தெரிந்துவிடும் என்று கூறுகிறார்.

குறும்படம் என்ன, நெடும் படமே போடுங்கள் என்று சுரேஷ் சக்கரவர்த்தி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதிலிருந்து, ஒரு சில உரசல்கள் ஏற்பட்டு இருந்தாலும், இதுதான் முதல் சண்டையாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 3 சீசன்களை பார்த்துவிட்டு வீட்டிற்குள் வந்துள்ளதால் கவனமாகச் செயல்படுவது போலவே தோன்றுகிறது. சண்டை ஆரம்பித்துள்ளதால் போட்டி இன்னும் விருவிருப்பாகச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

வணிகம்5 நாட்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி1 வாரம் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்2 வாரங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு4 வாரங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு1 மாதம் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு1 மாதம் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்1 மாதம் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!

வணிகம்1 மாதம் ago

தங்கம் விலை குறைவு, வெள்ளி விலை உயர்வு (22/08/2023)!

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.55,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!