சினிமா
என் வீட்டை விற்று ஹெலிகாப்டர்ல வருவேன்! பத்து தல டீசர் வெளியீட்டு விழாவில் பஞ்ச் பேசிய கூல் சுரேஷ்!

பத்து தல டீசர் வெளியீட்டு விழா சற்று முன் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ரொம்பவே எளிமையான முறையில் நடைபெற்றது. எளிமை என்றால் எந்த அளவுக்கு என்றால், படத்தின் நாயகன் சிம்பு, நாயகி பிரியா பவானி சங்கர் மற்றும் வில்லன் கெளதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என யாருமே கலந்து கொள்ளவில்லை. அந்த அளவுக்கு எளிமையாக நடைபெற்றது.
நடிகர் சிம்பு பேங்காக்கில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருவதால் தான் வர முடியவில்லை என்றும் இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என படத்தின் இயக்குநர் ஒபெலி. என். கிருஷ்ணா கூறினார்.

#image_title
அவரை தொடர்ந்து சிம்பு படங்களை அதிகம் ப்ரோமோஷன் செய்து வரும் நடிகர் கூல் சுரேஷை மேடையேற்றி பேச வைத்தனர்.
மைக் கிடைத்த நிலையில், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரில் வருவேன் என்றும், தயாரிப்பாளர் பயப்பட வேண்டாம், உங்க பட்ஜெட்ல கை வைக்க மாட்டேன். நான் என் சொந்த வீட்டை வித்தாவது என் தலைவன் எஸ்டிஆர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்து மலர் தூவுவேன் என பேசியது பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

#image_title
சிம்பு தான் என் பேச்சு, சிம்பு தான் என் மூச்சு, சிம்பு தான் என் வாட்ச் என பேசிய கூல் சுரேஷ், ஆமாம், வாட்ச்சில் எப்படி நேரம் சுற்றுகிறதோ, அதை போலவே எஸ்டிஆரை நான் சுற்றி வருவேன் என்றும் பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.
வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவுக்கு சிம்பு ஹெலிகாப்டரில் வருவதாக சொன்ன நிலையில், கடைசியில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஹெலிகாப்டரில் வந்தார். கமல்ஹாசன் மற்றும் சிம்பு தங்களது காரிலேயே இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.