சினிமா
எதிரிகளை ஏறி மிதிச்சு வந்தவன் இந்த ஏஜிஆர்; வெளியானது பத்து தல டீசர்!

நடிகர் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பத்து தல படத்தின் பவர்ஃபுல்லான டீசர் தற்போது வெளியானது. சில நொடிகளே ஓடக் கூடிய இந்த டீசரில் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன் மற்றும் துப்பாக்கி உடன் ரெட்டின் கிங்ஸ்லி எல்லாம் இடம்பெற்றுள்ளனர்.
நான் மண்ணை அளக்குறவன் இல்லை என்றும் மண்ணை அள்ளி வாழுறவன் என மணல் மாஃபியா செய்வதை பேசும் வசனமாகட்டும், நான் படியேறி மேல வந்தவன் இல்லை.. எதிரிகளை மிதிச்சேறி வந்தவன் என சிம்பு பேசும் வசனங்கள் ஃபயராக உள்ளன.

#image_title
ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையில் ஒபெலி. என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரம் உள்ளது. சேலை அணிந்து செம போல்டாக பிரியா பவானி சங்கர் வேகமாக வரும் லாரியை எதிர்த்து நிற்கும் காட்சிகளும், பொட்டு வச்சிட்டு பொங்கல் திங்கிறவன் இல்லை என கவுதம் மேனன் அரசியல்வாதி லுக்கில் மிரட்டி எடுக்கிறார்.
வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள பத்து தல படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.