இந்தியா
குழந்தையின் அருகே கோப்ரா பாம்பு…அடுத்து நடந்தது என்ன?.. அதிர்ச்சி வீடியோ….

பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள்.
ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ அல்லது துன்புறுத்தினால் மட்டுமே அது நம்மை தாக்க துவங்கும். அதுவும் தன் உயிரை பாதுகாத்து கொள்ளவே!. இந்த உண்மை புரியாமல் பாம்பை கண்டாலே அதை அடித்து கொள்ள வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க ஒரு வீட்டின் முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருக்க, அந்த குழந்தையை நோக்கி ஒரு கோப்ரா பாம்பு வேகமாக வருகிறது. அதை பெரியவர் கண்டு குழந்தையை கூட தூக்காமல் அதிர்ச்சியில் நிற்க, அங்கிருக்கும் இளைஞர் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே ஓடுகிறார்.
முதியவரும் உள்ளே ஓடி கதவை சாத்திக்கொள்ள பாம்பு உள்ளே செல்ல முடியாமல் அங்கும் இங்கும் ஊரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.