உலகம்
28 வயதில் 9 குழந்தைகள், வருடத்திற்கு ஒரு குழந்தை என அட்டவணை..!

28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள இளம் பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள் தாய்மை அடைவது என்பது ஒரு புனிதமானது என்றாலும் அது மிகவும் ரிஸ்க்கானது என்பதும் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்று கொள்ளும்போது மீண்டும் உயிர்த்தெழுகிறாள் என்றும் கூறப்படுவது உண்டு. பெண்கள் மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஒரு குழந்தைக்கு தாயாக தயாராகுவார் என்றும் ஒரு கர்ப்பம் என்பது அவர்களது உடலை பற்றி கவலை அடைய கூடிய ஒரு விஷயம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீண்ட காலமாக பெண்கள் முதல் குழந்தையை 20 வயது அல்லது அதற்கு பின்னர் தான் பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தனது 17 வது வயதிலேயே முதல் குழந்தையை பெற்று 12 வருடங்களாக வருடம் ஒரு குழந்தை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
டிக் டாக் வலைதளத்தில் அவர் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்கு தற்போது 28 வயதாகவும் 17 வயதில் தான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆரம்பித்ததாகவும் ஒவ்வொரு முறை கர்ப்பம் அடையும்போது இந்த குழந்தையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் நான் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டே வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
12 வருடமாக ஒவ்வொரு வருடமும் அவர் குழந்தை பெற்று வரும் நிலையில் அவருக்கு தற்போது ஒன்பது குழந்தைகள் இருப்பதாகவும் இத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது ஒன்பதாவது குழந்தையை பெற்றுக் கொண்ட பின்னர் தான் நிரந்தர பிறப்பு கட்டுப்பாட்டை பெற முடிவு செய்திருப்பதாகவும் இதை எனது கணவரும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திய பிறகு நான் கற்றுக் கொண்ட பாடங்களில் ஒன்று என் முழு உடலும் தற்போது தாயாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். என்னுடைய டீனேஜ் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது என்றும், குழந்தை பெற்றுக் கொள்வதிலேயே எனது டீனேஜ் வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் இருப்பினும் நான் தற்போது எனது குழந்தைகளுக்காக சந்தோஷமாக வாழ்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
17 வயதில் தனது கணவரை தான் சந்தித்ததாகவும் அதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் எனது கணவருக்கு குழந்தை மீது மிகுந்த ஆசை என்பதால் அவருடைய ஆசைக்கேற்ப குழந்தைகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த வீடியோவுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 17 வயதிலிருந்து ஒரு பெண் குழந்தை பெறுவதை மட்டுமே முழு தொழிலாக கொண்டு வருவதா? அந்த பெண்ணுக்கு வேறு இலக்கு இல்லையா? வேறு ஆசையே இல்லையா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் அந்த பெண்ணின் கணவரையும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.