இந்தியா
வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை: 19 நாட்கள் போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்த அதிசயம்!

தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

#image_title
குழந்தையின் தாய் வாஷிங் மெஷினின் அருகில் இல்லாதபோது அங்கு சென்ற குழந்தை சேரில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. 15 நிமிடங்கள் சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் மூழ்கி கிடந்த குழந்தையை கண்டுபிடித்த தாய் உடனடியாக மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே குழந்தை சுயநினைவின்றி, பேசமுடியாத நிலையில், மூச்சுத்திணறல் போன்ற சிரமங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இருந்தது.
இதனையடுத்து ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் தான் குழந்தை இருந்து வந்தது. பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்ட குழந்தையானது தனது தாயின் குரலை உணர்ந்து மீண்டும் பேசியது அதிசயமாக அமைந்தது. இதனையடுத்து 19-வது நாளில் குழந்தை உயிர் பிழைத்ததாக கூறி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். 19 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின்னர் குழந்தை உயிர் பிழைத்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.