உலகம்
எங்களை கிண்டல் செய்தால், அவர்கள் தலை நொறுக்கப்படும்: திடீர் எச்சரிக்கை விடுத்த சீன அதிபர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவி 100 ஆண்டுகள் கடந்த நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் மிகப் பெரும் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீன அதிபர் ஸி ஜின்பிங், வெளிநாட்டு சக்திகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் ஸி, ‘சீனாவை கிண்டல் செய்யும் காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் சீன மக்கள் தங்களை யாரும் கிண்டல் செய்யவோ, எள்ளி நகையாடவோ விடுவதில்லை. அப்படி யாராவது நம்மை கிண்டல் செய்ய நினைத்தால், அவர்களின் தலை 140 கோடி சீனர்களால் உருவாக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரில் மோதி நொறுக்கப்படும்.

கம்யூனிஸ்ட் கட்சி மூலம் சீனாவில் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் சீனாவில் நடந்துள்ளன. குறிப்பாக பல கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது கம்யூனிஸ்ட் அசாங்கம் தான்’ என்று கூறியுள்ளார்.
1921 ஆம் ஆண்டு மாவ் மற்றும் சில சீனர்களால் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தொடங்கப்பட்டது. தற்போது உலகின் மிக வலிமை வாய்ந்த அரசு அமைப்புகளில் அதவும் ஒன்றாக உள்ளது. தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 10 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள்.















