உலகம்
கோவிஷீல்டு போட்டவர்களை அனுமதிக்கும் ஐரோப்பிய நாடுகள்: மற்ற தடுப்பூசி போட்டவர்கள்?

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை உலகின் பல நாடுகள் ஏற்கனவே அனுமதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ள 8 நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என அறிவித்துள்ளது
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில் இந்த மூன்றில் கோவிஷீல்டு தடுப்பூசி தான் சிறந்தது என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டா, ஆல்பா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படும் என்றும் ஆய்வு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஸ்லோவேனியா, கிரீஸ், ஆஸ்திரியா, ஐஸ்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்பவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என்று அனுமதி அளித்துள்ளது
இதனை அடுத்து வெளிநாடு செல்லும் பயணிகள் பலர் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு முன்னுரிமை தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மற்ற தடுப்பூசி போட்டவர்களை அனுமதிப்பது குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளிவராததால் அந்த தடுப்பூசி போட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


















