சினிமா செய்திகள்
அனிதா சம்பத்தின் முதல் திருமண நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய அனிதா சம்பத் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தாலும் தைரியமான போட்டியாளராகவும், எந்த குரூப்பிலும் சேராத ஒரு போட்டியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அவர் ஆரியுடன் தேவையில்லாமல் மோதி போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் தனது தவறை உணர்ந்து உணர்ந்து மீண்டும் ஆரியுடன் நட்புடன் பழகி வந்தார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் தனது முதலாவது திருமண நாள் கொண்டாட்டத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அனிதா மற்றும் அவரது கணவர் இருவரையும் அவரது நண்பர்கள் கண்களை கட்டிக் கொண்டு செல்வது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதில் அனிதா சம்பத் கூறியதாவது ’எனது முதல் திருமண நாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை தான் இப்போது நீங்கள் பார்க்க போகிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.