சினிமா செய்திகள்
சூர்யா-க்கு தயார் செய்யப்பட்ட ஹரி படத்தில் அருண் விஜய் நடிக்கிறாரா?

நடிகர் அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அவரது மைத்துனர் இயக்குநர் ஹரி இயக்குகிறார்.
ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் அருண் விஜய் திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். அருண் விஜட் நடிப்பில் உருவான படங்களிலேயே இப்புதிய படம்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம் ஆகும்.
ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் இதற்கு முன்னர் திரிஷா இல்லைன்னா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இக்ஃலு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ என்ற ஒரு படம் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால், அந்தத் திரைப்படம் சில காரணங்களுக்காக கைவிடப்படுவதாக சில காலங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதனால் நடிகர் சூர்யாவுக்கு தயார் செய்யப்பட்ட கதையில்தான் நடிகர் அருண் விஜய் நடிக்கிறாரா என்ற செய்தி பரவிய வண்ணம் காணப்படுகிறது.

















