தமிழ்நாடு
அந்த இடத்தில் தேவர் படம் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பீர்களா? பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி

சூர்யா நடித்த ஜெய்பீம் பட விவகாரம் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சமீபத்தில் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு சூர்யா பதில் கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பாரதிராஜா ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் அந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் 4 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ’படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்துவதற்கு நீங்களும் திரையுலகினர்களும் ஆதரிக்கிறீர்களா? மேலும் அக்னி கலசம் இருந்த இடத்தில் தேவர் படம் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள நான்கு பக்க அறிக்கையில் கூறியுள்ளதாவது:



















