தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்கு ஆதரவாக ஆளுநர்… சந்தேகத்தை கிளப்பும் அன்புமணி!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த மசோதாவை தமிழக அரசு மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

#image_title
இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்ட இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் என வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக ஆளுநர் இந்த மசோதாவை நிராகரித்தபோது கடுமையாக விமர்சித்த பாமக தலைவர் அன்புமணி தற்போது மீண்டும் இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆளுநருக்கு இதில் என்ன கேள்விகள், என்ன குறைகள் இருக்கின்றது என்பது தெரியவில்லை. எனக்கு இதை வேறுவிதமான கோணத்தில் பார்க்க வேண்டுமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் வந்திருக்கிறது என்றார். ஆன்லைன் சூதாட்ட நிறுவன அதிகாரிகள் ஆளுநரை சந்தித்ததை ஏற்கனவே சில அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.