தமிழ்நாடு
மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது நல்லது தான்: பாயிண்டை பிடித்த அன்புமணி!

தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் ஆளுநர் இந்த மசோதாவை திருப்பி அனுப்பியதும் நல்லது தான் என கூறியுள்ளார்.

#image_title
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநரை மிக கடுமையாக சாடியுள்ளார். அவரது செயலில் உள்நோக்கம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அன்புமணி பின்னர் இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதும் நல்லது தான் என கூறி அதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது ஒரு வகையில் நல்லது தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை திருத்தத்துடனோ, திருத்தம் இல்லாமலோ சட்டப்பேரவை மீண்டும் இயற்றி அனுப்பும் போது அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும்.
அதன்படி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அதனால் தான் இதை நல்லது என்கிறேன் என்றார். மேலும் இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.