ஆரோக்கியம்
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?

கிரீன் டீ, மசாலா டீ பருகியிருப்பீர்கள். இதோ, இப்போது வெந்தய டீயும் பிரபலமாகி வருகிறது. வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அதை தவிர்த்து மேலும் பல நன்மைகள் வெந்தய டீயில் உள்ளது. வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து சூடாக குடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலின் கெட்ட கொழுப்பை கரைத்து பருமனை குறைக்க உதவுகிறது.
வெந்தயத்தின் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் இன்சுலின் உற்கத்தியை தூண்டி விடும். ஆய்வின் படி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும் என கூறப்படுகிறது.
வெந்தயத்தை ஊற வைத்து முளைகட்டி சாப்பிடலாம். பொடி செய்து அதனை நீர் அல்லது மோரில் சேர்த்து குடிக்கலம். வெந்தயம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும்.
வெந்தயக் கீரை பயன்கள்
முடி வளர்ச்சியை அதிகரிக்கும். சருமத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.









