சினிமா
தொழிலதிபராகும் அமலாபால்; பெண்களுக்கு முன்னுரிமை!
Published
4 years agoon
By
seithichurul
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், தற்போது பிசினஸ் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளார்.
அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் ஹாலிவுட் சைக்கோ படங்களுக்கு சவால் விடும் அளவில் உள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ராட்சசனை தொடர்ந்து, நயன்தாரா, சமந்தா வரிசையில், அமலாபாலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரு படங்களில் நடித்து வருகிறார்.
’அதோ அந்த பறவை போல’ மற்றும் மேயாத மான் இயக்குநரின் ‘ஆடை’ என அடுத்தடுத்து படங்களில் பிசியாகவுள்ள அமலாபால், தற்போது, புதிய தொழில் ஒன்றிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
ஊட்டச்சத்து தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை அமலா பால் துவங்கவுள்ளார். இதில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளாராம்.
சமீபத்தில், கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு, கை அடிபட்டு இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல், தானே களத்தில் இறங்கி உதவி அமலாபால், புதிதாக தொடங்கியிருக்கும் இந்த புது முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்!
You may like
நடிகை அமலாபாலுக்கு கிடைத்த கெளரவம்: புகைப்படம் வைரல்!
பார்ட்டி உடையில் பளிச் அழகு!… மனதை கொள்ளை கொண்ட அமலாபால்…..
இது வேற லெவல்!…டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்த அமலாபால்…
பார்த்தாலே ஹாட் பீட் எகிறுது!…பீச்சில் பந்து விளையாடும் அமலாபால்…
சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!…சட்டைய கழட்டி ஒப்பனா போஸ் கொடுத்த அமலாபால்…
கடற்கரையில் கன்னா பின்னா போஸ்.. கவர்ச்சியில் தெறிக்கவிட்ட அமலாபால்….