Connect with us

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி படத்திற்கே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியான அமலாபால்!

Published

on

நடிகர் விஜய்சேதுபதியின் 33வது படமாக உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட அமலாபால் திடீரென படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடை படத்தின் டீசர் வெளியான பிறகு அமலா பாலுக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. 70 லட்சத்திற்கும் மேலாக அந்த படத்தின் டீசர் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் 1 கோடி பார்வைகளை எட்டக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எஸ்.பி. ஜனநாதனின் உதவி இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் விஜய்சேதுபதி நாயகனாகவும், அமலா பால் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது விஜய்சேதுபதி படத்தில் இருந்து நடிகை அமலா பால் கால்ஷீப் பிரச்னை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலர், பேசிய சம்பளத்தை விட திடீரென தனது சம்பளத்தை அமலா பால் கூட்டியதன் காரணமாக படத்தின் தயாரிப்புக் குழு அமலா பால் வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன.

இந்நிலையில், அமலா பாலுக்கு பதிலாக இதுவரை வெளிவராத எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் நாயகியாக நடித்த மேகா ஆகாஷ் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
pifteau henri, biolinker.