சினிமா
நானி விளக்கம்: ‘தசரா’ படம் ‘புஷ்பா’ படத்தின் காப்பியா?

‘தசரா’ திரைப்படம் ‘புஷ்பா’ படத்தின் காப்பியா என்ற கேள்விக்கு நடிகர் நானி பதிலளித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் நானி. இவரும் கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கக்கூடிய ‘தசரா’ திரைப்படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக பல வித்தியாசமான கெட்டப்புகளில் நானி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளிலும் நானி தற்போது பிஸியாக இருக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் ட்ரையலரும் நேற்றும் வெளியானது. லக்னோவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, நானியிடம் இந்தப் படம் ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூன் கதாபாத்திரத்தின் காப்பி போலத் தெரிகிறதே எனக் கேட்கப்பட்டது. அதற்கு நானி பதிலளித்துள்ளார். ‘இந்தப் படத்தில் என்னுடையத் தோற்றம், உடை, பாவனை போன்றவை வேண்டுமானால் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படம் போல ஒரே மாதிரியாக இருக்கலாம்.
ஆனால், கதைக்களம் முற்றிலும் வேறானது. ‘தசரா’ படம் வெளியான பிறகு இது ‘தசரா’ லுக் என்றே சொல்வீர்கள்’ என இந்த விஷயத்தை பாசிட்டிவாக பேசியுள்ளார் நானி.