சினிமா செய்திகள்
அஜித் நடிப்பில் ‘பில்லா 3’: விஷ்ணுவர்த்தனுக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்

அஜித் நடிக்கவிருக்கும் பில்லா, மற்றும் பில்லா 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பில்லா 3 திரைப்படத்தை இயக்க விஷ்ணுவர்தன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பில்லா திரைப்படத்தை ரீமேக் செய்து அஜித் நடித்த பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பில்லா 2 படமும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அஜீத் – விஷ்ணுவர்த்தன் இணையும் படம் விரைவில் உருவாகும் என்று கோலிவுட் வட்டாரங்களால் கூறப்பட்ட நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பில்லா படத்தின் மூன்றாம் பாகத்தின் கதையை தயார் செய்யுமாறு அஜித், விஷ்ணுவர்த்தனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததாகவும் இதனை அடுத்து அவர் இந்த படத்தின் கதை திரைக்கதையை தயார் செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் படம் முடிந்ததும் விஷ்ணுவர்தனுடன் அஜித் இணைந்து பில்லா 3 படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அஜித் நடித்த படம் மூன்றாம் பாகமாக உருவாகுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.