சினிமா
கருணாநிதியை காவேரி மருத்துவமனை வந்து பார்த்த அஜித், கவுண்டமணி!

கவேரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை நடிகர் அஜித் மற்றும் கவுண்டமனி இருவரும் வியாழக்கிழமை மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு வந்துள்ளனர்.
நடிகர் அஜித் மருத்துவமனை சென்ற போது கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இருந்தனர். அதே நேரம் கவுண்டமனி மருத்துவமனை வந்த போது திராவிடக் கழகத் தலைவர் வீரமணி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
புதன்கிழமை நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதி உடல் நலம் குறித்துக் கேட்டறிந்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















