சினிமா செய்திகள்
ஹிட் அடித்த பேய் படத்தின் 2-ம் பாகத்திலும் நடிகர் சித்தார்த்..!

தமிழில் ஹிட் அடித்த பேய் படம் ஒன்றின் 2-ம் பாகத்திலும் நடிக்க நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’அவள்’. இதில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமையா நடித்திருப்பார். இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியானது.
தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே இயக்குநர் இயக்க நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதையின் நாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என இயக்குநர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த மிலிந்த் ராவ் தான் தற்போது நடிகை நயன்தாரா-வின் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ்-ன் கீழ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















