சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை கைப்பற்றிய ’பாகுபலி’ நடிகர்..!- புதுப்பட அறிவிப்பு

சூது கவ்வும் பாகம் 2 படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கதை நாயகனுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூது கவ்வும் முதல் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அதற்கு பதிலாக நடிகர் சத்யராஜ் முக்கிய பாத்திரமாக நடிக்கிறார். சிவி குமார் தயாரிப்பில் அர்ஜுன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது தயாரிப்பாளர் சிவி குமார் கொற்றவை என்னும் படத்தை இயக்கி வருகிறார். மாயவன் என்னும் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















