சினிமா செய்திகள்
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் சரத்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக உருவாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சரத்குமார்.

அதுமட்டுமல்லாமல் சமத்துவ மக்கள் கட்சியையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சரத்குமாருக்கு திடீரென உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் தரப்பு, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத் தான் மருத்துவமனை சென்றார். இப்போது பரிசோதனைகள் செய்யப்பட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். நடிகர் சரத்குமார் நலமுடன் உள்ளா என விளக்கம் அளித்துள்ளனர்.
சரத்குமார் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















