Connect with us

சினிமா

ஜவான்’ படத்தில் விஜய் எவ்வளவு நேரம் வருகிறார்?

Published

on

‘ஜவான்’ படத்தில் விஜய் எவ்வளவு நேரம் வருகிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா இதன் படப்பிடிப்பில் இணைந்தார். இந்த வருடம் ஜூன் 2ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி அதிரடியான வில்லனாக நடிக்கிறார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் ஷாருக்கான், அட்லி இருக்கும்படியான புகைப்படம் வெளியாகி வைரலானது. நடிகர் விஜய் ஷாருக்கானுடன் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் கிட்டத்தட்ட 15-20 நிமிடங்கள் வர இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது விஜய் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் இருவருக்குமே திரையில் விருந்தாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Free carrd alternative | biolinker.