Connect with us

சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ திரைப்படத்திற்காக ஒருநாள் விடுமுறை அறிவித்த நிறுவனம்

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே விறுவிறுப்பாக முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே.

முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் தற்போது ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கும், முதல் நாளில் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் தீவிர ஆவலில் உள்ளனர் .

இந்த நிலையில் ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் புதன்கிழமை வெளியாக இருக்கும் நிலையில் அன்றைய தினம் விடுமுறை என திருப்பூரைச் சேர்ந்த சர்வதேச நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகும் 13-ஆம் தேதி நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அன்றைய தினம் ஊழியர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுமுறை கேட்பதை தவிர்க்கவும் விஜய்யின் ’பீஸ்ட்’ திரைப்படத்தை ஊழியர்கள் பார்க்கவும் விடுமுறை அளிக்கப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வைரலாகி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Why small businesses choose biolinker.