இந்தியா
இளம் வயதில் சாதனை செய்த 32 வயது பெண் தொழிலதிபர் திடீர் மரணம்!

இளம் வயதில் சாதனை செய்த 32 வயது பெண் தொழிலதிபர் ஒருவர் திடீரென காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பன்குரி ஸ்ரீவத்சவா. 32 வயதாகும் இவர் இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார் என்பதும் அவரது தொழில் மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பன்குரி ஸ்ரீவத்சவா திடீரென மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பன்குரி ஸ்ரீவத்சவா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக இளம் வயதில் தொழில் அதிபராகி பல சாதனைகள் செய்த பங்குரி ஸ்ரீவத்சவா அவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு மட்டுமே ஆகி உள்ளது என்பதும் சமீபத்தில்தான் அவர் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
பெண்களை மையமாகக் கொண்டு பன்குரி ஸ்ரீவத்சவா தொடங்கிய நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகமாக தந்தது என்பதும் பெண்கள் கல்வி கற்பதற்கும் தொழில் கற்பதற்கும் உதவிகரமாக இருந்தது என்றும் பெண்களுக்காக பிரதேசமாக சமூக வலைதளம் ஒன்றையும் அவர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
பன்குரி ஸ்ரீவத்சவா நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில்தான் பன்குரி ஸ்ரீவத்சவா அவர்களின் இழப்பை எங்களால் தாங்க முடியவில்லை என்று அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.








