தமிழ்நாடு
ஓபிஎஸ் வீட்டில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஓபிஎஸ்-இன் சென்னை வீட்டிற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்தார்.

#image_title
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து தன் தாயின் இறப்பின் போது ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார் ஓபிஎஸ். அதில் தமிழ்நாடு ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர், ஜார்கண்ட மாநில ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், பிற கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினார்கள்.