இந்தியா
நான் சொன்னதை செய்தால் ரூ.80 லட்சம்.. பெண் விமான பயணியிடம் கோரிக்கை வைத்த கோடீஸ்வரர்..!

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணியிடம் முன்னணி தொழில் அதிபர் ஒருவர் தான் கூறியதை மட்டும் செய்தால் ரூ.80 லட்சம் வரை தருவதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமான பயணத்தின் போது பல வினோதமான நிகழ்வுகள் நடந்து வருகிறது என்பதும் அப்படி ஒரு வினோதமான அனுபவத்தை தான் விமான பயணி சமீபத்தில் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஸ்டீவ் என்பவர் அந்த பெண்ணிடம் உங்கள் மாஸ்க்கை கழட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த பெண் தனது மாஸ்க்கை கழட்ட முன்வரவில்லை. இதனை அடுத்து ஸ்டீவ் ரூ.80 லட்சம் தருகிறேன், உங்கள் மாஸ்க்கை கழட்டுங்கள் என்று கூறியதும் அந்த மனிதரின் வினோதமான கோரிக்கையை கேட்டு அந்த பெண் ஆச்சரியம் அடைந்தார், மேலும் அவருக்கு சிறிது பயமும் அவருக்கு ஏற்பட்டது.
தொழிலதிபர் ஸ்டீவ், மீண்டும் அந்த பெண்ணிடம் மாஸ்கை கழட்டும்படி கேட்டுக் கொண்டபோதிலும் அந்த பெண் மாஸ்க்கை கழட்டவில்லை என்றும் அவரது 80 லட்சம் வாய்ப்பையும் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் விமானத்தில் காலை உணவு பரிமாறப்பட்டபோது மாஸ்க்கை அகற்றியதாக ஸ்டீவ் கூறியுள்ளார்.
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியபோது பலர் தங்களது டுவிட்டின் மூலம் கோபமடைந்துள்ளனர். இது ஒரு அராஜகமான நடத்தை என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பல பயனர்கள் தெரிவித்தனார். ஒரு சிலர் ஒரு பெண்ணின் மாஸ்க்கை அகற்றக் கூறுவதற்கு இவ்வளவு பெரிய தொகை கொடுப்பது விசித்திரமாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். விமான பயணத்தின் போது ஒரு பெண்ணுக்கு இதுபோன்று பணம் கொடுக்கும் நடைமுறை இந்தியாவில் உள்ளதா என்றும் பலர் எழுதியுள்ளனர். ஒரு சில பயனர்கள் அந்த பெண் அந்த ஆஃபரை பெற்று இருக்கலாம் என்றும் மாஸ்கை கழற்றிவிட்டு ரூ.80 லட்சம் பெற்று இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
ஏற்கனவே அவர் சக பயணி ஒருவரிடம் மாஸ்க்கை கழட்டினால் ரூபாய் 8 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோடீஸ்வரர் தான் கொரோனா வைரஸ் தொற்றின் போது தடுப்பூசி மற்றும் மாஸ்க் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்தார் என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.