Connect with us

சினிமா செய்திகள்

மகனுக்காக துபாய்க்கு வீட்டை மாற்றிய நடிகர் மாதவன்!

Published

on

மகனுக்காக துபாய்க்கு வீட்டை மாற்ற இருப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலக நடிகர்களில் ஒருவரான மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை வென்றுள்ள அவர் அடுத்ததாக 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் நீச்சல் குளங்களை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாதவன் துபாய்க்கு குடியேறப் போவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மும்பை உள்பட பல நகரங்களில் பெரிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் அதனால் மும்பையில் சரியாக நீச்சல் பயிற்சி செய்ய முடியாததால் துபாய்க்கு வீடு மாற தயாராகி வருகிறோம் என்றும் தனது மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் அவருக்கு தேவையான உதவிகளை நானும் எனது மனைவியும் துபாயில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்து தனக்கு பெருமை சேர்த்து தந்த தனது மகன் வேதாந்த் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்ல நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்புக்கு அவர் துபாயில் இருந்து இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..