சினிமா
100 கோடி கிளப்பில் இணைந்த மாநாடு.. மகிழ்ச்சியில் படக்குழு….
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மாநாடு படத்தின் டிரெய்லரை பார்த்த போதே தெரிந்தது. அதேபோல், இவர் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே, இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகள் அரங்கை நிறைத்தன.எனவே, இப்படம் தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.
படம் வெளியாகி 25 நாட்கள் ஆகவுள்ள நிலையில் மாநாடு படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸ் (உலக அளவில்) சேர்த்து இப்படம் ரூ.97 கோடியை வசூல் செய்துள்ளது. எனவே, விரைவில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளது.
சிம்பு நடித்த ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொடுவது இதுவே முதல்முறை..







