சினிமா செய்திகள்
லண்டனில் வைகைப்புயல் வடிவேலு: வைரல் புகைப்படம்!

வைகைப்புயல் வடிவேலு லண்டனில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்பதும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அவருக்கு மீண்டும் திரையுலகில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதுன்ம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் ஷிவாங்கி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் செய்ய படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன், வடிவேல், சுராஜ் ஆகியோர் பாடல் கம்போசிங் பணிகள் தற்போது இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லண்டன் சாலைகளில் சுராஜ், வடிவேலு ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சில காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

















