கேலரி
சின்ன பையனாகவே மாறிய சிம்பு…. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு அது ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்,முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

இந்த படத்திற்காக சிம்பு மேலும் எடை குறைந்து இருக்கிறார். அதோடு, மீண்டும் ஒரு கிராமத்து கதையில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. அதேபோல், சிம்புவே தனது பழைய உடலையும், புதிய உடலையும் ஒப்பிட்டு வெளியிட்ட புகைப்படமும் இணையத்தில் தாறுமாறாக வைரலானது.

இந்நிலையில், சின்ன பையன் போல் சிம்பு அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை சிம்புவே தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்ககத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



















