சினிமா செய்திகள்
இந்த ஆண்டே வெளியாகிறதா ‘தளபதி 65? கொரோனாவால் திடீர் மாற்றம்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த ஆண்டே அந்த திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக விரைவில் இந்த படத்தை முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து இந்த படத்தை மிக விரைவில் முடித்துவிட்டு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜார்ஜியாவில் மூன்று வாரங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதனை அடுத்து சென்னை பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

















