சினிமா செய்திகள்
விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு: மீண்டும் இணையும் யுவன்!

நடிகர் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் அவர் தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 31-வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சரவணன் என்பவர் இயக்க உள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மீண்டும் இசை அமைக்க உள்ளார். விஷால் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்த படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் அறிமுக வீடியோ விஷாலின் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. விஷாலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் விஷால் நடிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூபாய் 40 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
Here it is, #Vishal31 #NotACommonMan
⏯️ https://t.co/8M362JgWbE@VffVishal @thisisysr @THUPASARAVANA pic.twitter.com/Fj62N73VLz
— Vishal (@VishalKOfficial) April 2, 2021


















