சினிமா செய்திகள்
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இந்த ‘குக் வித் கோமாளி’ ஸ்டார்!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் ‘குக் வித் கோமாளி’ டிவி நிகழ்ச்சி மூலம் உலகப் பிரபலமடைந்த ‘புகழ்’ மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
புகழ், அங்கு எதேச்சையாக சென்றாரா அல்லது மாநாடு படத்தில் அவரும் எதாவது கேமியோ ரோல் செய்கிறாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. அதே நேரத்தில் புகழின் புகழ் உச்சத்தில் இந்த சமயத்தில் அவர் மாநாடு படத்தில் நடித்திருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

















