சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் தெறிக்கவிடும் ‘கோடியில் ஒருவன்’ டிரெய்லர்!

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வரும் விஜய் ஆண்டனி நடித்துள்ள அடுத்தப் படம் தான் ‘கோடியில் ஒருவன்’. இந்தப் படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ஆத்மிகா நடித்துள்ளார். அவரைத் தவிர கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமான ராமச்சந்திர ராஜு ‘கோடியில் ஒருவன்’-லும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனந்த் கிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை சத்தமே இல்லாமல் ரிலீஸ் செய்து ஹிட் அடிப்பதில் விஜய் ஆண்டனி பெயர் பெற்றவர். அந்த வகையில் அவர் முன்னர் நடித்த ‘பிச்சைக்காரன்’, ‘சலீம்’, ‘அண்ணாதுரை’ உள்ளிட்ட படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதைப் போல இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் ‘கோடியில் ஒருவன்’ திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிகிறது.