தமிழ்நாடு
ஹரிநாடார் வந்த ஹெலிகாப்டர் தரை இறங்க அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் களத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஹரிநாடார் என்பது தெரிந்ததே
நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் இவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்குமிடையில் ஹரிநாடார் மிகப்பெரிய சவாலாக போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
11 கிலோ நகையுடன் இவர் பிரச்சாரம் செய்து வருவதை அந்த பகுதியில் உள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பதும் இதனால் இவர் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஹரிநாடார் தனது தொகுதியில் ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூரில் ஹெலிகாப்டரில் பரப்புரை மேற்கொள்ள வந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடார் வந்த ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Helicopter from Harinadar denied permission to land


















