தமிழ்நாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்த இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

#image_title
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் எடப்பாடி பழனிச்சாமி. அதில், அதிமுக கட்சி விதிகளை மாற்றியதையும், பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார்.
இதற்கு தேர்தல் ஆணையம் 10 நாட்களில் பதிலளிக்கப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை அடுத்து இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி வசமானது.