தமிழ்நாடு
அடக்கி வாசியுங்கள்… பாஜகவுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

சென்னையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவை அடக்கி வாசியுங்கள் என கூறியது அதிமுக-பாஜக இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

#image_title
ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில், கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கூட்டணி விஷயத்தில் எவ்வித பிரச்சனையும் கிடையாது. தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் உறுதி செய்துள்ளார்கள். கூட்டணிக்கும் கொள்கைக்கும் சித்தாந்தத்திற்கும் சம்பந்தம் கிடையாது. நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஜெயலலிதா காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.
பாஜகவை பொறுத்தவரை அடக்கி வாசிப்பது நல்லது. அது அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் நல்ல விஷயமாக அமையும். அடக்கி வாசிக்கவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் ஜெயக்குமார்.