சினிமா செய்திகள்
மார்ச் 26ல் ‘டாக்டர்’ ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் வரும் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சற்றுமுன் ‘டாக்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேகேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ’வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் இந்த படம் வெளிவந்தால் சரியாக இருக்காது என்ற காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சற்று அதிருப்தியில் இருந்தாலும் தேர்தல் பரபரப்பு நேரத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு திரைப்படம் வெளியாவது சரியானனது அல்ல என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு ‘டாக்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Doctor Your love & support kept us going thus far, requesting you to keep up the support a little bit longer! ❤️????@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @priyankaamohan pic.twitter.com/3QScbj8tnV
— KJR Studios (@kjr_studios) March 9, 2021
















