சினிமா செய்திகள்
தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் ’பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தின விருந்தாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.
முதல்கட்டமாக ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இந்த படத்தில் இம்டபெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வரவேற்க தனுஷ் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களில் இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தனுஷ் ரசிகர்கள் இந்த பாடலை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
#Karnan first single #KandaaVaraSollunga from tomorrow 8 PM. Get ready for #KarnanAzhaippu @Music_Santhosh @dhanushkraja @mari_selvaraj @thinkmusicindia @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 pic.twitter.com/89Xkrq0Cpy
— Kalaippuli S Thanu (@theVcreations) February 17, 2021

















