சினிமா செய்திகள்
ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சூரரைப் போற்று..!- அனைத்துப் பிரிவுகளிலும் கிடைத்த இடம்!

ஆஸ்கர் விருதுகளுக்காகப் போட்டியிட அனைத்துப் பிரிவுகளின் கீழும் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான போதும் மாபெரும் வெற்றிப் படமாக இந்தத் திரைப்படம் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் இந்தப் படம் மாபெரும் அங்கீகாரத்தை அளித்து கவுரவித்துள்ளது. இந்த சூழலில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளுக்காக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த இசை, எனப் பல பிரிவுகளின் கீழும் இந்தப் படம் இடம் பெற்றுள்ளது. ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்படலாம், வெல்லலாம் என்பதால் இந்தியாவின் சார்பில் சூரரைப் போற்று படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















