சினிமா செய்திகள்
கணவருடன் இணைந்து புது ‘பிசினஸ்’..!- பெண் தொழிலதிபர் ஆன காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து புதிதாக வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்கும் ஒரு புது தொழிலை ஆரம்பித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் கெளதம் கிட்சுலு என்னும் தொழில் அதிபருடன் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பின் நடிகை காஜல் நடிக்க மாட்டார் என்ற பேச்சுகளை மாற்றி தொடர்ந்து படங்களில் வரிசையாகக் கமிட் ஆகி வருகிறார் காஜல். தற்போது மேலும் கூடுதலாக கணவர் உடன் இணைந்து புது பிசினஸ் ஒன்றையும் காஜல் தொடங்கியுள்ளார்.
kitched என்ற பிராண்ட் மூலம் வீட்டு அலங்காரப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளார் காஜல். முதற்கட்டமாக குஷன் ரகங்களை விழாக்காலங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார் காஜல்.
Gautam & I are delighted to present Kitched- our home decor label to all of you. Kitched was born out of our love for design and our journey of doing up our first home together.We are launching with a capsule collection of cushions-these are all handmade and have a festive theme. pic.twitter.com/iejGqNWOgG
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) December 22, 2020




















