Connect with us

சினிமா செய்திகள்

தலைவர் 168 – சிவா – சன் பிக்சர்ஸ் வெளியானது அதிரடி அறிவிப்பு!

Published

on

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது அதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்திரன், பேட்ட உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள நிலையில் அடுத்ததாகத் தலைவர் 168வது படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டு இருக்கும் போதே சிவா ஒரு கதையை இவரிடம் கூறியிருந்தார். ஆனால் சிவாவின் வாய்ப்பை ஏ ஆர் முருகதாஸ் தட்டி சென்றார்.

சில நாட்களுக்கு முன்பாக லதா ரஜினிகாந்த்தின் பள்ளி விழாவில் மிண்டும் ரஜினியை சந்தித்த சிவா, முன்பு சொன்ன கதையில் சில மாற்றங்களைச் செய்து கூறியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும், அல்லது ஏ ஆர் முருகதாஸே ரஜினிகாந்த்தின் 168வது படத்தையும் இயக்க வாய்ப்புள்ளதாகச் செய்தி சுருள் தளத்திலும் குறிப்பிட்டு இருந்தோம்.

இந்நிலையில், சிவா ரஜினிகாந்த்தை இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது. மூன்றாவது முறையாக ரஜிகாந்த்தின் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pvc cửa cuốn.